நேற்றைய தீர்த்தத்திருவிழாவில் அம்மன் தீர்த்தமாடிய நிழல் படம் எமக்கு கிடைக்கவில்லை அந்த இணைப்புக்காய் காத்திருக்கிறோம் ஆனாலும் எமக்கு இரவுத்திருவிழாப்பதிவுகள் கிடைத்துள்ளன. இரவுத்திருவிழாவும் மிகச்சிறப்பாக நடந்தேறியதாக எமது ஊர் இணையத்துக்கு தகவல்கிடைத்தது. இந்த திருவிழாவுக்கான உபயகாரர்கள்.சிறுப்பிட்டியில்வாழும் வைத்தியநாதன் குடும்பத்தினர். ஶ்ரீஸ்கந்தராஜா குடும்பத்தினர். புலத்தில்வாழும் கிருஷ்ணா குடும்பத்தினர் (மோகன்) சுவிஸ் இணைந்து இன்றைய பன்னிரண்டாம்நாள் தீர்த்தத்திருவிழாவுக்கான இரவுத்திருவிழா ஊர் கூடி மிகச்சிறப்பாக (02.04.2014)அம்மன் வீதி உலா வந்து நடைபெற்றதாகத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் மயூரன்
திசைகள் எட்டும் பார்த்து -அம்மன்
தீர்த்தம் ஆடும் காட்சி
தீராத வினையாவும் -அவர்
தீர்த்தம் தீர்க்கும் பாரீர்
ஊர் பார்க்க உலா வந்து தீர்த்தமாடினாள்
உல்லாசப் பவனியோடு தீர்தம் ஆடிநாள்
ஊர் கூடி அவளை இன்று தோளில் ஏற்றினார்
ஒளி தீபம் தனைக்காட்டி அவர்போற்றினார்
ஓங்கார நாயகியே நீயும்வாடி
ஒளியோடு முகம்காட்டி அருள்தாடி
தீண்டாமல் பிணிதீர்க்கும் வரம் தாடி
திக்கெட்டும் ஒளிவீசிஅருள்தாடி
. அருள்தாடி அம்மா அருள்தாடி
ஒளியாகி அம்மா அருள்வாய்-நீ
ஆதியின் தேவியே முத்துமாரி
அன்னையின் ரூபமே முத்துமாரி