இன்றைய பூங்காவனத்திருவிழாவுடன் இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருவிழாக்கள் நிறைவுகாண்கிறது இன்றைய பகல் திருவிழா உபயகாரர் வேலாயுதம்-ரத்தினவேல் குடும்பத்தினர் (பட்டு) இரவுத்திருவிழா பாலசிங்கம்-பொன்னம்மா குடும்பத்தினர். இவர்கள்திருவிழாவாக ஊர் கூடி மிகச்சிறப்பாக (03.04.2014)அம்மன் வீதி உலா வந்து சிறப்புற கலை நிகழ்வுகள் நடைபெற்றதாகத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக கிடைத்துள்ளது. அத்தோடு இந்தவிழாவில் மூன்று பெரியார்கள் அவர்கள் வாழ்வில் செய்த நற்பணிக்காய். ஊர் பணிக்காய். ஆன்மீகப்பணிக்காய் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் முன்னெடுப்பில் ஊருக்கான நிர்வாகக் குழுவினரால் கௌரவிக்கப்படுள்ளனர் என்ற தகவலோடு இத்திருவிழாக்காலத்தில் எமது ஊர் இணையத்துக்கு நிழல்படம் தந்துஉதவிய எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் மயூரன் அவர்களுக்கும் நன்றியுடன் ஊர் இணையம் எமது ஊரின் மற்றைய ஆலயத்திருவிழாக்கள் தகுந்த நேரத்தில் தரப்பட்டால் இணைக்க ஊரின் இணையம் காத்திருக்கிறது என்ற தகவலோடு நன்றிகள்
இழுப்பையடியில் முத்துமாரி
இதயம் எல்லாம் அமர்ந்த தேவி
இன்பமும் துன்பமும் உன்னை நாடி
இரு கரம் கூப்பி நிற்ப்போம் மாரி
கருமாரி மகமாயி உருமாறி
காவல் கொள்ளும்-நீ
காத்து உலகை காவல் செய்யும்
அருள்மாரியும் நீ
பழிபோக்கி நல்வாழ்வு எமக்களித்தவள்-நீ
நாயகியே அருகிருந்து துணைபுரிபவள்-நீ
கருவாகி உருவாகி காத்து நிற்ப்பாய்-நீ
காலம் எல்லாம் அடி பணியக் காவல் கொள்வாய் -நீ
வேப்பிலைக்காரிக்கு கற்பூரம் ஏந்து
வேப்பிலை கரகக் காவடியோடு
நேர்த்தியை பூர்த்தியோடு அவள் கோவில் நாடு
நீ செய்த பிணியாவும் களைந்தோடும் பாரு