என் அன்னை !
என்னை நானாக்க என்
அன்னை கண்விழித்து
கருவிலே சுமந்தவள்
ஏங்கிய விழிகளுடன்
தாங்கிய என் சுமையை
பூமியில் ஆளாக்கி தந்தவள்
நித்தம் மலம் கழுவி
நீராட்டி என்னை அன்னை
சுத்தமாய் சுகாதரம் தந்தவள்
கத்தும் வேளையது
காலையே மாலையோ
கனிவோடு என்னைக் துாக்கி
முத்தம் தந்தவள் என் அன்னை !
துாங்கிடா விழியோடு
நித்தம் மார்பு சுரந்த
பாலை எனக்கு ஊட்டி
பரிவுடன் மகிழ்வு கண்ட அன்னை
அவள் இன்றி இவ் உலகில்
நான் இல்லை !-அதை
தமிழ் கொண்டு நான் எழுத
வார்த்தை இல்லை!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 13.04..2022 உருவான 11 54 மணி