கவிக்குள் அடங்கா பெருமை!
அழகில் மூழ்கி
ஆனந்தம் காணும் மனம்
அந்த நினைவில்
கனவும் காணும் தினம்
புவியில் யாவும் புதுமை
கவிக்குள் அடங்கா பெருமை!
இயற்கையும் அழகு
இளமையும் அழகு
இன்பம்கொடுக்கும்
இனிய காதலும் அழகு
பறவைகள் உயரமாய்
பறப்பதும் அழகு
பனியிலும் மழையிலும்
நனைவதும் மகிழ்வு
படர்ந்திடும் இயற்கை
நிறங்களும் அழகு!
அருவியும் அழகு
அது அசைவதும் அழகு
ஓசைகள் கேட்டிட
காதுக்கும் மகிழ்வு
ஒளி தரும் சூரியன்
உதிப்பதும் அழகு
ஒப்பில்லா இயற்கையின்
அழகே அழகு !
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 12.06..2022 உருவானநேரம்13 16 மணி