சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (26.03.2014)இன்று ஐந்தாம் நாள் திருவிழாவாக அலங்காரமாக அம்பாள் வீதி உலா வந்துளார் ஊர்களின் சிறப்பு ஆலயங்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள். வழிபாடுகளில் சிறப்பு எல்லோரும் ஒன்று கூடி மகிழ்வோடு தெய்வதரிசனம் பெறுவது.இன்றைய உபயமாக இ.நவரத்தினராசா குடும்பம்குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்து. இன்று சிறப்பாக நடந்தேறியதாக எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் சிறப்பான தகவல் தந்தார்.
இன்பமும் துன்பமும்
எமையாள் அவள் வடிவில்
இலுப்பையடி வந்தமர்ந்து
காத்து நிற்பவள் அவள் வடிவில்
வந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாது
வாழும்போது என்ன நற்காரியம் செய்வோம்
என்று எண்ணி வாழ்வோம்
அதுவே புண்ணியம் -ஆகும்
எண்ணிய யாவும் நிறைவேற
நல் மனதோடு அவள் துதிபாடி
அவளின் அருளடி தினமும் தொழுதிட
அன்போடு அவள் அருள் பொழிவாள் அனுதினம்……