யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையினால் 40 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 24 மணி நேரத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/141, J/142 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்பட்ட பகுதிகளிலேயே மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த காலநிலையானது மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert