உலகின் பணக்கார நாடானது சீனா;

உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகின் முன்னணி பணக்கார நாடுகளான சீனா முதல் இடத்திலும் , அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் உலகின்மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது.

சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய 2000-ம் ஆண்டில் அதன் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. 2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும்பணக்கார நாடாக மாறியுள்ளது. இதே காலத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020-ல் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனாவே காரணம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert