தீக்காயத்துடன் மனைவி மரணம்:கணவர் கைது!
தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் தகராறு புரிந்துள்ளார்.
தகராறின் ஒரு கட்டத்தில் மனைவி தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய போது , கணவன் தன்னிடமிருந்த லைட்டர் மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து கணவனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.