புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்

தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வருகின்றன.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.இந்த வைரசுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வழங்கி இருக்கிறார்கள். புதிய வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்தான ஒமிக்ரான் என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசை ‚கவலைக்குரிய வைரஸ் வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert