உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை முதல் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert