விருச்சிக ராசி உங்க பொதுவான இவை தான்; வாங்க என்னவென்று பார்ப்போம்

விருச்சிக ராசிக்காறர்களுக்கா பொதுவான பார்வை இவைகள் தான்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவானாவார். விருச்சிகம் ராசியில் விசாகம்நட்சத்திரத்தின் 4ம் பாதமும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் சட்டேன்று வார்த்தையை விட்டு விடுவார்கள்.

விருச்சிக ராசியினர் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். எதையும் விடாபிடியாக நின்று சாதிப்பார்கள்.

பார்பதற்கு அப்பாவித்தனமான முகத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடயதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். வாய் ஜாலம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசி ஜெயிப்பது கடினம்.

விருச்சிக ராசியினர் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் முன் கோபம் அதிகம் இருக்கும். எத்தனை தோல்விகள் வந்தாலும் விடாபிடியாக நின்று முடித்து காட்டுவார்கள். இவர்கள் சேமிப்பில் அதிக அக்கறை கொண்டவர்கள். யாருடைய பணமாவது இவர்கள் கைகளில் புழங்கிகொண்டே இருக்கும்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சமுக சேவைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். அதே போல தான தர்மங்கள் செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. இளமையில் கஷ்டமான வாழ்க்கை அமைந்தாலும் நடுத்தர வயதில் சுக போகமான வாழ்கை வாழ்வார்கள்.

விருச்சிக ராசி விசாகம்நட்சத்திரம், விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம், ஆகியவற்றின் பொதுவான குணங்களை அறிய மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert