வீட்டினுள் செல்வம் பெருக வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள்
உங்களுடைய வீட்டில் எப்போதும் செல்வம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் அதற்கு சில பரிகாரங்கள் உள்ளன.
அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.
அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம்.
பச்சரிசியும் காசும் ஒரு சிறிய பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள்.
அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.
பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள்.
பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.
இப்படி அரிசியும் ஒரு ரூபாய் காசுகளும் நிரம்பிய அந்த பாட்டிலையோ அல்லது பானையையோ வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம்.
தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம். பிரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு.
பீரோவிற்கு உள்ளே கூட இதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். உள்ளே வைப்பதை விட வெளியில் வைப்பது தான் சிறந்தது. பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம்.
இதன் மூலம் உங்களுடைய இருப்பிடத்தை தன ஆகர்ஷணம் மிக்க இடமாக மாற்ற முடியும். நம்முடைய கண் பார்வை படும்படி இருப்பது தான் இந்த பரிகாரத்தின் வெற்றியே.
இப்படி ஒரு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் அரிசியை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, மீண்டும் அதே பாட்டிலில் முன்பு அதே நாணயங்களைக் கொண்டு, மீண்டும் அரிசியால் நிரப்பி வையுங்கள்.
பிறகு பாருங்கள். லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிடுவாள்