ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியது முதலே கூட்டத்தில் பங்கேற்றுள்ள அரச அதிகாரிகளும், ஆளுநரும் ஆங்கிலத்திலேயே உரையாற்றியும் கலந்துரையாடியும் வந்தனர்.
இதன்போது வடக்கு மாகாணம் தமிழ் மக்கள் வாழும் மாகாணம், பணியாற்றும் அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால் தமிழ் மொழியில் உரையாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருந்தபோதிலும் அதற்கு எவரும் செவிமடுக்காத நிலையில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக கூட்டத்திலிருந்து தான் வெளிநடப்புச் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.