இலங்கை தமிழர்களை பெருமைப்படுத்திய சுவிஸ் வங்கி; தாயகத்தை தலை நிமிர வைத்த சைந்தவி கேதீஸ்வரன்!

சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களை பெருமைப்படுத்தியுள்ளது.

குறித்த அரசவங்கி தமிழர்களின் தமிழ் கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள அரச வங்கி நிறுவனம் ஒன்று (Bern Kantonal Bank) இவ்வாறு தனது விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற தமிழ்க்கலைத் தேர்வில் இசைத்துறையில் ஆற்றுகைத் தேர்வினை நிறைவுசெய்த தமிழ் மாணவியும் வளர்ந்துவரும் இளம் இசை ஆசிரியருமான இசைக்கலைமணி சைந்தவி கேதீஸ்வரன் அவர்களுடைய இசைத்துறை சார்ந்த அட்டைப்படத்தினை தங்கள் வங்கியின் இலத்திரனியல் இயந்திரத்திலும் (ATM Cash Machine) விளம்பர செயற்பாடுகளிலும் பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert