நயினாதீவு கடலில் முதியவர் சடலம்!

நயினாதீவு பகுதியில், கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நயினாதீவு – 3ஆம் வட்டாரப் பகுதியில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர், 2ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா தர்மபாலன் (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சென்று விட்டு வருவதாக சென்றவர், கடந்த 9 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே, இன்று சடலமாக மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert