ராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong)  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17-12-2021) பார்வையிட்டார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டதோடு மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று (17-12-2021) முற்பகல் சென்றடைந்தார்.

குறித்த இடத்திலிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் ராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert