யாழில் பட்டத்துடன் வானில் பறந்த இளம் குடும்பஸ்தர்

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்.பருத்தித்துறை புலோலி பகுதி வடமராட்சியில் இன்று (20-12-2021) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்த போது பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, பட்டம் ஏற்றியுள்ளனர். இந்நிலையில், பட்டம் ஏற்றிய இளைஞர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர். இளம் குடும்பஸ்தர் ஒருவர் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும், 40 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் பட்டம் கட்டப்பட்ட கயிற்றை நோக்கி பின் நகர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செய்யப்பட்டார். அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த இளம் குடும்பஸ்தரின் மகள், பட்டக் கயிற்றில் தனது தந்தை தொங்கிய நிலையில் பறப்பதைக் கண்டு, அந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாது, ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ந்துள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert