ஆண்டவன் படைப்பின் விந்தை!

பூமியில் பிறந்திட்ட உயிர் இனம் யாவும்
புவியாண்டு நிற்கும் சத்தியின் கையில்
ஆண்டியாய் வாழ்வதும்
அரசனாய் ஆவதும் எம்வசம் இல்லை
புரிந்து நீ வாழ்!
வேண்டுதல் வேண்டிட
வினைகளும் தீராது
மாண்டிடும் மரணத்தை
தடுக்கவும் முடியாது
காணிக்கை கொடுத்து
கடவுளை கேட்டாலும்
கண் கலங்கி நின்று
கடவுளை தொழுதாலும்
விதியின் செயலை நீ மாற்ற முடியாதே !
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி03.03..2022 உருவான 12 03மணி