தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.18.06.2022
யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை
சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு ஆண்டொன்று ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
ஓராண்டு காலம் ஓடி மறைந்ததம்மா!
இப்புவிதனில் எம்மை தவிக்க விட்டு!
ஆண்டுகள் பல ஓடி வந்தாலும்
ஆறாத எம் துயர் யார் துடைப்பார்?
மாறாத இன்முகம் நாம் காணவே
மறு பிறப்பில் வருவீரோதுயர் நீக்கவே!!
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள் -என்றும்
நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்: குடும்பத்தினர்