சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணியுடன் இணைவோம்
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது இதற்கு ஊர்மக்களும் புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்து தந்துள்ளதுடன் பல எமது ஊர்மக்கள் புலத்திலிருந்து நிதியுதவியும் செய்ததால் முத்துமாரியின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது இதன் பணிக்கான முழுமை பணிகளில் சிலபணிகள் இன்னும் இருக்கின்ற படியால் எமது ஊரைச்சேர்ந்த முத்துமாரியின் பக்தர்களே உங்கள் பணியில் இணைய முத்துமாரி உங்களை அழைக்கிறா இவள் துணைகொண்டே எங்கள் வாழ்வு சிறந்து நிற்கின்றது அவள் பகத்தியாக உங்களை இணைத்து
அவள் இல்லம் சிறக்க அவள் உள்ளம் குளிர எமது வாழ்வு சிறக்கும் அல்லவா ..
இங்கே இதுவரை செய்த செலவுகளும் இன்னும் கிட்டத்தட்ட ஏற்படும் செலவுகளும் என கணக்கு விபரம் ஒளிவு
மறைவின்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் முத்துமாரி அம்மன் திருப்பணி நிர்வாகுழுவினர்
நேர்மை வலிமையுள்ளது நம்பிக்கை எம்மை ஓங்கி நிற்கச் செய்கின்றது அதனால் உங்கள் பார்வைக்காய் எமது ஊரின் இணையத்தில் இந்தநேர்முகம் காட்டும் கணக்குகள் பார்வைக்காய்தருகிறோ ம்
மிகவிரைவில்வேலைகள் முடிந்ததும் தனித்துவமாக யார் என்ன செய்து தந்தார்கள் யார் யார் முத்துமாரி அம்மன் திருப்பணிக்கு எவ்வளவு நிதி தந்தார்கள் என்ற கணக்கு இணைக்கப்படும்
மேலும் எஞ்சி இருக்கின்ற திருப்பணிக்கு நீங்களும் எமது ஊர் ஆலயத்தின் புனரமைப்புக்கு உங்கள் உதவிகளை ஊர்வாழ்புலம்பெயர்மக்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆலயநிர்வாத்தினர் செயலாற்றிவருகின்றார்கள்,
ஊர்மக்கள் இணைந்த ஆலய புனரமைப்பு சிறப்புக்கண்டு நிற்கின்றது இன்னும் எஞ்சி இருக்கின்ற திருப்பணியை நிறைவேற்ற இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள்புரிவாள் உங்கள் உருவில் பணிபுரிவாள் என்ற நம்பிக்கையுடன் முத்துமாரியின்திருப்பணி ஊர்செழிக்க உலகம் செழிக்க பணிசெய்வோர் சிறப்புற அருள் கிடைக்கும் இணைவோம் திருப்பணிக்காய் ஆலயநிர்வாகத்தினர்