சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (25.03.2014)இன்று நான்காம் நாள் திருவிழாவாக அலங்காரமாக அம்பாள் வீதி உலா வந்துளார் ஊர்களின் சிறப்பு ஆலயங்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள். வழிபாடுகளில் சிறப்பு எல்லோரும் ஒன்று கூடி மகிழ்வோடு தெய்வதரிசனம் பெறுவது.இன்றைய உபயமாக வ.பாலசுப்பிரமணியம்-குணமணி குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்து. இன்று சிறப்பாக நடந்தேறியதாக எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் சிறப்பான தகவல் தந்தார்.
நலம் புரியும் நாயகியாள்
நமைக்காத்து அருள்புரிவாள்
நம் வாழ்வை அவள் காத்து
நாள் எல்லாம் துணைபுரிவாள்
வலம் வந்து வீதி உலா
நலம்தரும் நாயகியே
நாள் எல்லாம் உன் அருளால்
நம்வாழ்வில் உய்வு இங்கே-நீ
துணைபுரிவாய் நமைக்காத்து
அருள் புரிவாய்,நாயகியே