தகமை!
தன்னைத்தரம் உயர்த்தி
தன் செயலை புகழ்பாடி
உன்னை வெளிப்படுத்தி
உயர்வு காண நினைக்கின்ற -நீ
பின்னே வருகின்ற
பிரதி பலன் தெரியாமல்
புறம்காட்டி நிற்கின்ற
பேதை மனிதர்களே?
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க உம் செயலை!
தன்னை தான் செய்யாக் கருமத்தை
தனதாக்கி
வீண் வரிகள் கொண்டு
விலாசம் தேடும்
மனிதர்களை பார்க்க
விந்தையாய் உள்ளதையா
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க உங்கள் செயலை!
விரிந்த வெளிதனில்
பரந்து பரவசமாய்
பார்ப்போர் புகழ என்று
யார் யாரோ செய்ததெல்லாம்
நான் செய்தேன் என்று
பரப்பும் பொய்கள்
பர பரப்பு பேச்சென்று – நீங்கள் எண்ணி
விசை பலகையில் எழுதும்போது
விரல்களும் அஞ்சவில்லையோ?
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க உங்கள் செயலை!
பிறர் உம்மை நகையாடி
புகழ் தேடும் பித்தர் என்று
பொழுதொல்லாம் வசைபடி நிற்க
புகளாரம் வேண்டுமோ?
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க உங்கள் செயலை!
பொய்யுரைத்து புகழ்தேடி
பிறரிடத்தில் வசைதேடி-நீ
வாழ்வது என்ன வாழ்கை-நீ
புரிந்த பணிதனை நிறைந்த மனதுடன்
நின்று நிமிர்ந்து பிறர் வாழ்த்துதலே தகமை!