பெருமை தேடித்தந்த திருகோணமலை மாணவி!
கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி துளஸ்வினி விமல்ராஜ் இடம்பிடித்துள்ளார்.
எதிர்வரும் 22.11.2021 ம் திகதி குறித்த சாதனை மாணவிக்கான கௌரவிப்பு, விருது வழங்கல் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் வழங்கப்படவுள்ளது.
மேலும்,. திருகோணமலை மண்ணிற்கு பெருமையீட்டித்தந்த குறித்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.