நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛லேசான காய்ச்சல் மற்றும் சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert