யாழில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்!

யாழ். பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று தமிழகத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.

குறித்த மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் 23 பேரும் தொடர்ந்தும் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் இன்று அந்த 20 பேரை தமிழகம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 18 பேர் மட்டும் தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார்கள். ஏனைய 5 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெறவுள்ளனர்.

இவர்கள் இன்று இரவு 11.50 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நாளை அதிகாலை தமிழகம் செல்லும் விமானத்தில் பயணிக்கவுள்ளனர். கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை முடிவடைந்த பின்பே நாட்டுக்கு அனுப்பபடுவர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert