வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!
வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்
தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் பாதிப்படைந்த பிரதேச சபை உறுப்பினர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாருடனான தர்க்கத்தின் போது மயக்கமடைந்த அவரது தங்கை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையம் செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வருகை தந்த பொலிசாரினாலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.