பத்திராமாய் பரம்பரையை காத்திடலே சிறப்பு !
அன்று கரம் பிடித்து
அடி எடுத்து நான் நடக்க
ஆர்வம் கொடுத்து – எனக்கு
நடை பழக்கிய என் தந்தை !
சென்ற இடம் எல்லாம்
எனை அழைத்து
சிறப்பாக வழிகாட்டி
சிப்பியாய் என் வாழ்வை
செதுக்கிவைத்து
சிறப்புக் கண்டு மகிழ்ந்தார்
இன்று அதுபோல் நான்
என் பிள்ளையை கரம் பிடித்து
அன்றய நினைவுகளோடு
நடந்து செல்கின்றேன்
சித்திரமாய் செதிக்கிவைத்த
செயல்கள் தொடரும்
பத்திராமாய் பரம்பரையை
காத்திடலே சிறப்பு !
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி10.04..2022 உருவான 11 11மணி