சிறுப்பிட்டியில் இன்று மூத்த பிரைஜைகள் மற்றும் சிறுவர் தினம் சிறப்புடன்.
சிறுப்பிட்டி கிழக்கு J/271 கிராம சேவகர் பிரிவுக்கான சர்வதேச மூத்த பிரைஜைகள் தினம் மற்றும் சிறுவர் தினம் ஆகியன இன்று 01.10.2022 சனிக்கிழமை சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது ஓய்வு நிலை அதிபரும் முதியோர் சங்க தலைவருமான திரு அ.அருந்தவநேசன் அவர்களின் தலைமையில் மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக லயன் கலாநிதி நா.தனேந்திரன் யாழ் மாநகரசபை உறுப்பினர் அவர்கள் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடப்பட்டது