குளிர்காலத்தில் நாம் வேண்டிய உணவுகள்பற்றி!
சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குளிர்காலம் கடுமையான குளிர்ச்சியை அளிக்கிறது. மக்கள் குளிரில் இருந்து தப்பிக்க நெருப்பு மற்றும் சூடான ஆடைகளை போடுகின்றனர். ஆனால் இந்தக் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, சூடான ஆடைகள் மட்டுமல்ல, சில சூடான பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய 4 பொருட்கள் இவை… இவற்றை தொடர்ந்து உண்டு வந்தால், உடல் உள்ளே இருந்து சூடாக இருக்கும், குளிர்கால நோய்கள் அண்டாது.
உண்மையில், குளிர்காலத்தில் உடலில் வெப்ப உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள, மக்கள் பல்வேறு வகையான உலர் பழங்கள் மற்றும் வெப்பம் கொடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உட்கொள்ளலாம்.
பேரிச்சம்பழம்
பேரிட்சை உடலுக்கு சூடு கொடுக்கும் உணவாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பேரிச்சம்பழம் (Fruits for Health), உடலுக்கு சூடு தருவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
இஞ்சி
குளிர்காலத்தில் இஞ்சி மிகவும் பலன் அளிக்கக்கூடியது. தேநீரில் இஞ்சி சேர்த்து குடிக்கும் வழக்கம் மிகவும் நல்லது. இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து பானமாக அருந்தலாம். காய்கறிகள், சாலடுகள், என அனைத்திலும் கலந்து பயன்படுத்தலாம். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது, இது உடலுக்கு வெப்பத்தைத் தருவது மட்டுமின்றி, மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.
பூண்டு
பூண்டு உடலுக்கு சூடு கொடுக்கும் உணவுப்பொருள் ஆகும். எனவே குளிர்காலத்தில் உடலில் வெப்பத்தை பராமரிக்க, உணவில் பூண்டை சேர்க்க வேண்டும். பூண்டுப் பற்களை நறுக்கி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடாக இருக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பூண்டு உதவுகிறது.
சிவப்பு மிளகாயை உட்கொள்வது
சிவப்பு மிளகாய் மிகவும் சூடாக இருக்கும், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மிளகாய், குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவும். இரத்த உறைவு ஏற்படுவதையும் தடுக்க மிளகாய் உதவுகிறது.