திருப்பதியில் ஒருநாள் தங்கியிருந்து தரிசனம் பெற ஒரு கோடி ரூபாய்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இடம்பெறும் , சுப்பிரபாதம் , அர்ச்சனை உள்ளிட்ட பல சேவைகளை ஒருநாள் முழுவதும் ஆலயத்தில் தங்கி இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவை பற்றுச்சீட்டு (ரிக்கெட்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைகளில் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தைச் செலுத்திவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்கலாம்.

முதல்கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் திரட்டப்படும் நிதியானது, திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert