புத்தாண்டோ நீ வருக !
புத்தாண்டோ நீ வருக வருக
புன்னகை பூக்க இவ் உலகு புலர்க புலர்க
புலரும் பொழுதாய் நீ வந்தாய்
நலங்கள் கொண்டு நாம் வாழ
புத்தாண்டே நீ வருக வருக
வற்ராத நலம் வேண்டும் -உலகில்
வாழ்வோர்க்கு சுகம் வேண்டும்
சுற்றமும் சுகம் வாழ
சுதந்திரம் உலகாள
புத்தாண்டே நீ வருக வருக
நற் தமிழ் உலகாள
நம் இனத் துயர் நீங்க
நாடுகள் செழித்தோங்க
நலம் கொண்டு நிலம் செழிக்க
புத்தாண்டே நீ வருக வருக
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 01.01.2022 உருவான நேரம் மதியம் 12.20 மணி