முன்னோர்கள் நினைவலை!
அன்னையும் தந்தையும்
அன்பினால் உருவாகி
அகிலத்தில் உலவ விட
ஆனந்தம் கொண்டமனம்
சிறுவனாக இருந்த போது
சிரித்து விளையாடி
சிந்தை மகிழ்ந்த காலம்
சிந்தையில் உலவியதே!
கந்தை கசக்கி கட்டி
கால் வயிறு உணவு உண்டும்
கனிவுடனே வரவேற்று
கவனித்து வாழ்ந்தோர்கள்
கண்டன்று வாழ்ந்த காலம்
கண்முன்னே தோண்றிடுதே!
எந்தை இனம் வாழ்ந்த வாழ்வு
என் சிந்தை தனில் மீளாய்வாய்
முந்திய வாழ்வு அது
முன்வந்து தோண்றியது
முன்னோர்கள் நினைவலை!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 05.01.2022 உருவான நேரம் மாலை15.22 மணி