முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது எப்படி?

நிறைய இளம் பெண்களின் முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது பாரிய பிரச்சியையாக உருவெடுத்துள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கிரீம்களை பயன்படுத்துகின்றார்கள்.

எனினும் நல்ல மாற்றத்தினை உணர முடியாது உள்ளது. இதற்கு இயற்கை வழியில் தீர்வு இருக்கின்றது. ஒரே நாளில் நல்ல ஒரு மாற்றத்தினை உணர முடியும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட்செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்

கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்துவிடும்.

வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும்.

10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்தால், வாழைப்பழத் தோலில் உள்ள லுடீன் மற்றும் பொட்டாசியம், சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சியளிக்கும்.

தேன்
தேன் மூக்கு மற்றும் கன்னங்களில் திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும்.

அதற்கு தேனை தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிய பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert