சிறுப்பிட்டி மக்கள் எல்லாம் இணைவோம் ஒன்றாக!
சிறுப்பிட்டி என்பது –
நம் சிறு ஊராம்
சீவை வாழ்ந்த
எம் தாய் வீடாம்!
சிறுப்பிட்டி மக்கள் எல்லாம்
இணைவோம் ஒன்றாக
சிறு துளி பெரு வெள்ளம்
என்றார் பெரியோர்கள்
செம் மண் பயிர் செழிக்க
கழி மண் நெல் விதைக்க
வருவாய் எமக்களித்த
நிலம் அல்லவா-அந்த
வருவாய் கொண்டுவந்த
வாழ்வல்லவா!
வாளமாய் வாழும்
வெளி நாடல்லவா-நாம்
வாளமாய் வாழும்
வெளி நாடல்லவா!
புலத்தில் வாழ்ந்தாலும்
நிலத்தை மறந்து நீ
வாழ நினைக்காதே!
உன் மனதில் உறைந்துள்ள
ஊரின் நினைவுகளை மறந்து வாழதே!
உறவுகள் தவித்திருக்க
உதவிக்காய் கரம் நீட்ட!
ஒற்றுமையாய் நாம் எடுக்கும்
முடிவல்லவா! நாம்
ஒன்றுபட உயர்ந்துவிடும்
ஊரல்லவா!
ஓரணியாய் இணைந்து சென்றால்
பலமல்லவா!
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அதை நீ மறக்காதே!
அன்னை பூமிதனில் வாழ்ந்த வாழ்வுதனை
என்றும் மறக்காதே!
ஊருக்கான பாடலாக 2010ஆம் ஆண்டு வெளிவந்த என்கவிதை
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா