சுவையான உருளைக்கிழங்கு சோறு சமைப்பது எப்படி?
தேவையான பொருட்கள் :
மசாலா பொடி தயாரிக்க
- தனியா – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் – 5
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தையம் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கொத்தம்மலி கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
- அரிசியை உதிரியாக வேக வைத்து வெப்பம் தணிய ஆற வைக்கவும்.
- மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும்.
- சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
- தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.
- அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும்.
- தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும்.
- சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும்.
- உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும்.
- இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும். சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார். இதற்கு மொறுமொறு அப்பளம், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.