இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 666 பேர் பலி: 16,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 666 பேர் பலி: 16,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 18,454 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 9,361 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக அதிகரித்துள்ளது. 
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,53,708 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 % ஆக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.16 % ஆக உள்ளது.  
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,73,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 101.30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,64,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 59,84,31,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert