தனியார் துறை ஓய்வுபெறும் வயது: 60ஆக அதிகரிக்கும் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றில்

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற விவகார குழு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்திற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரையும் உள்ளடங்குகிறது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது தொடர்பான 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க சட்டத்தின் கீழான அபாயகரமான தொழில்வாய்ப்பு வர்த்தமானி அறிவிப்பை திருத்துவதற்கான பிரேரணையும் அன்றைய தினம் பாராளுமன்ற அங்கீகரத்திற்காக சமர்ப்பிக்கப்பட இருக்கிறது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert