மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க ஜப்பான் எடுத்துள்ள அதிரடி முடிவு!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் இயற்கை அழிவுகள் பெரும் வகையில் இடம்பெறுகிறது. இதற்கு முதற்கட்ட உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஓவ்வொரு ஆண்டும் ஜப்பானில் பெய்யும் அதிக கன மழையால் டோக்கியோ நகரம் பயங்கரமாக பாதிக்கப்படுகிறது

இதனால் அந்நாட்டு அரசு நீரை வெளியேற்ற ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்தது. டோக்கியோவின் மேல்பரப்பில் இருந்த வாய்க்கால், நீர்நிலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழும்பி விட்டன.

அதனால் அவர்கள் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை உருவாக்கினர். சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது.

பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert