ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு- 4 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.ஆப்கானிஸ்தான், காபூல் நகரின் பரபரப்பான பர்வான் பகுதியில் ஒரு வாகனம் மீது நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் திடீரென பயங்கரவாதிகள் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் பல சேதமடைந்தன. குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிகிறது.

இதேபோல், வடக்கு தக்கார் மாகாணத்தின் தலைநகரான தாலுகானின் புறநகரில் விபத்தாக சில வெடி பொருட்கள் வெடித்ததில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பழைய உலோகங்களை விற்பனைக்காக சேகரித்துக் கொண்டிருக்கும்போது, தவறுதலாக வெடி குண்டு கையில் எடுத்தபோது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தையக் கால போர்களில் விட்டுச்சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள், கண்ணிவெடிகளால்  நாட்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 பேர் கொல்லப்படுகின்றனர் அல்லது ஊனமுற்றோர்களாகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert