இந்தியா – சீனா 12ம் தேதி பேச்சு
லடாக் எல்லை பகுதி அத்துமீறல் தொடர்பாக இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் இடையே வரும் 12ம் தேதி பேச்சு நடக்க உள்ளது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம் ஆண்டு நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம் அத்துமீறியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பின் நடந்த பேச்சு காரணமாக மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும், இரு தரப்பிலும் அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பிரச்னையில் முடிவு காண்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பிலான பேச்சு தொடர்கிறது.
இதுவரை 13 கட்ட பேச்சு நடத்தப்பட்டும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தகட்ட பேச்சு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
கிழக்கு லடாக்கில் நம் நாட்டின் சுஷுல் எல்லைப் பகுதியில் இந்தப் பேச்சு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.