எண்ணிப்பார் தமிழ் இனமே!
எண்ணிப்பார் தமிழ் இனமே
எதனால் இவ் வாழ்வு ?
எண்ணி நீ இருந்தாயா?
இப்படி ஒரு வாழ்வை!
பிறந்தோம் வளர்ந்தோம்
புகழுடன் நாம் வாழ்ந்தோம்
புரிதல் இல்லா ஆட்சியாலே
புறம் காட்ட போர்கண்டோம்
அலைந்தோம் அல்லல் உற்றோம்
அழிவு பல நாம் கண்டோம்
பிரிந்தோம் உறவுகளை
பிற தேசம் புறப்பட்டோம்
பயின்றோம் பல மொழிகள்-தமிழர்
பண்புதனை நாம் காத்தோம்
உழைத்தோம் உறக்கமின்றி
உயர்வு தனை நாம் கண்டோம்
சளைத்தோம் தமிழர் என
சான்றேதும் இல்லாமல்
வளர்த்தோம் தமிழ் மொழியை
வந்த எம் சந்ததிக்கு
விழிப்போம் விழித்தெழுவோம்
விடிவு காண நம் இன்னமும்
செழிப்பாய் எம் இனம் தான்
சிறப்பாய் வாழ்வதற்கு
செயல் படுவோம் தமிழா
சேவையாய் அதை நினைத்து!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 08.01.2022 உருவான நேரம் மாலை13.20 மணி