தைமகளை வரவேற்போம்

உழவர் நெல் விதைத்து
கதிரை அவன் அறுத்து
உ ண்ண உணவு கொடுக்க
உதயமாகும் பொங்கல்
தைப் பொங்கல் !

வாசலில் கோலமிட்டு
பானையில் அரிசிபோட்டு
சூரியன் அவன் முன்னே
வாழை இலை எடுத்து
வடிவாக படையலிட்டு
வணங்கி நின்று
கொண்டாடும் பொங்கல்
தைப் பொங்கல் !

கூடிய உறவுகளை
தேடி உணவளித்து
கூடி மகிழ்வுடனே
குடும்பங்கள் மகிழ்வு கணா
கொண்டாடும் பொங்கல் -தைப் பொங்கல் !

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 14.01.2022 உருவான நேரம் 12.05 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert