முக கவசங்களிலிருந்து விடுதலை? இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் 1231 புதிய கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.