அதிஷ்ட இலாப சீட்டால் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்

தனது குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற தமிழ் இளைஞன் அங்கு தற்செயலாக வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழகம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினகர் என்ற இளைஞன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு Fujairah நகரில்,  கட்டட தொழிலாளியாக வேலை புரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 25-ஆம் திகதி, ஒன்லைன் மூலம் அதிஷ்டஇலாப சீட்டொன்றை வாங்கியுள்ளார்.

இதையடுத்து புத்தாண்டை தொடர்ந்து நடந்த குலுக்கலில், அவர் வாங்கிய (1, 33, 40, 45, 46) இலக்கம் விழவே, அவருக்கு உள்ளூர் மதிப்பில் 10 மில்லியன் திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 55,24,68,280 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இந்த பணம் மூலம் என் குடும்பத்தை காப்பாற்ற முடியும், இதைத் தவிர, , இந்த பரிசுத் தொகையை வைத்து எனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பாடசாலைக்கு உதவ உள்ளதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert