நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன.

தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். 
தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert