நலம் வேண்டி உன்னை-நாம் வணங்கிறோம்!
நலம் வேண்டி உன்னை-நாம்
வணங்குகிறோம்!
நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்
பிள்ளையாரே!
நலம் வேண்டி- எங்கள்
நலம்வேண்டி!
நலம் வேண்டி உன்னை-நாம்
வணங்குகிறோம்!
நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரே!
எம் மண்ணாம்
செம் மண்ணில்
எழுந்திங்கு நிற்பவன்!
எமக்கு அருள் காட்சி தந்து
எமை இங்கு காப்பவன்!
ப ண் இசையை பாடி நிற்க
பொருள் எல்லாம் தந்தவன்!
நவற்கிரி வாழ் பிள்ளையாரே
வளம் செழிக்க நின்றவன்!
மாணிக்கப் பிள்ளையார்
புகழை போற்றி நாளும் பாடிடுவோம்!
மனதில் உள்ள பிணியை போக்க
உன்னை நாடிடுவோம்!
நலம் வேண்டி உன்னை-நாம்!
எண்ணி நிற்க காரியமே
முன்னிருக்கும் வினாயகன்!
எம் மனதின் இருள் போக்கி
ஆண்டு நிற்கும் நாயகன்!
கண் இமைக்கும் வேளையிலே
வேண்டுதலை அருள்பவன்!
காத்து நிற்க இங்கே வந்து
கோவில் கொண்ட திருமகன்!
மாணிக்கப் பிள்ளையார்
புகழை போற்றி நாளும் பாடிடுவோம்!
மனதில் உள்ள பிணியை போக்க
உன்னை நாடிடுவோம்!
நலம் வேண்டி உன்னை-நாம்!
நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் பாடல் என்கவிதை வரிகளிலும் இசையிலும்
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா