பேஸ்புக் ‚மெட்டா‘ எனப் பெயர் மாறியது

பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்கால இணையதளம் மெய்நிகர் உலகமாக மாறும் என்பதால், இந்த பெயரை தேர்ந்தெடுத்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். 

மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அது அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கள் செயலிகளும் அவற்றின் பெயர்களும் மாறவில்லை எனவும், மார்க் ஜக்கர்பெர்க் விளக்கமளித்தார்.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளின் பெயர் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், கூகிள் அதன் நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்று மறுசீரமைத்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert