ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை மூடல்

பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக இருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்சில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 8 லட்சத்தை தாண்டி உள்ளது. இது உலகமெங்கும் உள்ள நோய் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷியா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உள்பட ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. டென்மார்க், சைபிரஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இந்த நோய் தீவிரம் அதிகமாக இருக்கிறது.

சராசரியாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை தினமும் 3,413 ஆக உள்ளது.

உலகளவில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் இது 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை 61 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். பொது மக்களும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இறப்பு சதவீதம் குறைந்து வருகிறது.

தற்போது ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி உள்ளனர். பல நாடுகளில் இருந்து வரும் விமான சேவையையும் ரத்து செய்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert