கனடா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி
கனடாவில் விலைவாசி அதிகரிப்பால் பாரிய உணவு தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதியளவு உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
2019ல் இதேப்போன்றதொறு ஆய்வில் 36% மக்களே அவ்வாறான ஒரு நிலையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வை கனேடிய மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2020 டிசம்பர் முதல் 2021 டிசம்பர் வரையான காலகட்டத்தில் கனடாவில் சமையல் எண்ணெய் விலை 41.4% அதிகரித்துள்ளது.வெள்ளை சக்கரையின் விலை 21.6% அதிகரித்துள்ளது.
மேலும், கடன் பிரச்சனைகள், குடியிருப்புக்கான கட்டணங்கள், உணவுப் பொருட்களின் விலை, வருவாய் மற்றும் நிதி நிலை உட்பட அனைத்து காரணிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில், 98% மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய உணவளிக்க திணறுவதாக தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் மக்கள் பெரும்பாலும் வேலையை இழந்தவர்கள் அல்லது நிரந்தர வருவாய் இல்லாதவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.