இதுகும் ஒருவாழ்வா ?
வாடகை வீட்டில் இருந்து
வட்டிக்கு பணம் எடுத்து-தம்மை
வள்ளலாய் காட்டிக்கொண்டு
வாழ்கின்ற மனிதரே இதுவும் ஒருவாழ்வா
ஊர் சென்று உல்லாசம் -அங்கு
உள்ளோர்க்கு பணம் கொடுப்பு
நீர் இங்கு தடுமாறும்
வாழ்வதனை எடுத்துரைக்க
ஏன் இந்த தடுமாற்றம்
ஏளனம் செய்வார் என்றா ?
இரவல் நாட்டினினே
இரவு பகல் கண் விழித்து நீ
உழைத்த பணம் தன்னை
வட்டிக்கும் வாடைக்கும்
கட்டி கட்டி நீ கண்ட மிச்சம் என்ன
ஓடி உழைத்ததனால்
உடல் நலம் கெட்ட பின்னே
உன் வாழ்வு என்ன ஆகும்
என்று நினைத்தாயா ?
பகட்டும் பரவசமும்
பயன் இல்லா கொள்கையும்
இருப்பதை கொண்டு
இருக்கின்ற வரையில்
இன்புற வாழ்வதே நல் வாழ்க்கை
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 28.02.2022 உருவான 12 46மணி